காரையூர்:
காரையூரை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் (வயது 45). இவரது மனைவி ரகுமத் நிஷா, மகன் ஆசித். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரகுமத் நிஷா வஞ்சினிப்பட்டியில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட இப்ராஹிம் எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.