கருமத்தம்பட்டிக்குள் வராமல் சென்ற2 அரசு பஸ்களுக்கு அபராதம்

கருமத்தம்பட்டிக்குள் வராமல் சென்ற 2 அரசு பஸ்களுக்கு அபராதம்

Update: 2023-10-11 19:15 GMT

கருமத்தம்பட்டி

கருமத்தம்பட்டி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் கருமத்தம்பட்டி நால்ரோடு பஸ் நிறுத்தத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான பஸ்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு வராமல், மேம்பாலத்தில் சென்று சுமார் 1 கி.மீ தொலையில் உள்ள நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர்.

ஒரு சில பஸ்கள் கருமத்தம்பட்டிக்கு செல்லாது என்று கூறி பயணிகளை ஏற்ற மறுத்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் சூலூர் வட்டார போக்குவத்து அதிகாரி சண்முகசுந்தரம் கருமத்தம்பட்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த 2 அரசு பஸ்கள் கருமத்தம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு வராமல் சுமார் 1 கி.மீ தூரம் தள்ளி நின்று பயணிகளை நெடுஞ்சாலையில் இறக்கி விட்டது தெரியவந்தது.

உடனே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பஸ்களை நிறுத்தி கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து அத்துமீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்