விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாகபேசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2023-06-23 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ஆபாச பேச்சு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சுதாகர். இவர் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவரின் செல்போன் எண்ணை அவரது புகார் மனுவில் இருந்து எடுத்து அவருக்கு போன் செய்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக அடிக்கடி பேசி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரிடம் சென்று, எனதுமனைவியிடம் இதுபோன்று பேசி தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி உள்ளார். அதற்கு அவர், 'உன்னை கைது செய்து உள்ளே வைத்து விடுவேன்' என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆயுதப்படைக்கு மாற்றம்

இதையடுத்து கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய அவர், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

சிறப்பாக பணியாற்றியதற்காக சப்-இன்ஸ்பெக்டர் சுதாகருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிலையில், அவர் பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசியதாக எழுந்த புகாரில் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்