சரக்கு வாகனங்களில் அதிகமாக ஏற்றி செல்லப்படும் வைக்கோல் கட்டுகள்

சரக்கு வாகனங்களில் அதிகமாக வைக்கோல் கட்டுகள் ஏற்றி செல்லப்படுகின்றன.

Update: 2023-10-04 18:45 GMT

முதுகுளத்தூர், 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் மற்றும் திருவாடானை பகுதிகளில் உள்ள வைக்கோல்களை தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் பலர் விலைக்கு வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்கின்றனர். ரூ.100-ல் இருந்து 150 வரை ஒரு வைக்கோல் கட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கொண்டு செல்லப்படும் வைக்கோல் கட்டுகளை சரக்கு வாகனத்தில் அளவுக்கு அதிகமாக சிலர் ஏற்றி செல்கின்றனர். அவை வாகனத்தில் உயரமாக ஏற்றி செல்வதால் மேலே செல்லும் மின்கம்பியில் உரசி வைக்கோல் கட்டுடன் சரக்கு வாகனமும் தீப்பிடித்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

குறிப்பாக பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, தேவிபட்டினம், ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி வழியாக செல்லும் வாகனங்கள் வைக்கோல் கட்டுகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்கின்றன. அளவுக்கு அதிகமாக வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்