ஹார்டுவேர்ஸ் கடையில் உரிமையாளர் தீக்குளிப்பு

கடலூர் ஹார்டுவேர்ஸ் கடையில் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-16 18:46 GMT

திருப்பாதிரிப்புலியூர்,

தற்கொலை முயற்சி

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 59). மாற்றுத்திறனாளி. இவர் கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடைக்கு வந்திருந்தார். இரவு 7 மணி அளவில் திடீரென கடையின் கழிவறைக்கு சென்ற அவர் உடல் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அலறி துடித்த அவரை அக்கம், பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். அங்கு அவர் பலத்த தீக்காயங்களுடன் கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இது பற்றிய புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்முருகன் கடன் சுமையால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? உடல் நிலை பாதிப்பால் தற்கொலை முயற்சி செய்தாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கடைக்குள் உரிமையாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்