தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-08-14 19:39 GMT

ராஜபாளையம், 

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஹேமந்தாபாலே (வயது 35). இவர் ராஜபாளையம் அருகே சங்கரபாண்டியாபுரம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்துள்ளது. இதை மற்ற நண்பர்களுடன் கூறி மன வேதனையில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹேமந்தாபாலேவின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்