அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்ட சிறுவனை காப்பாற்றிய சக மாணவர்கள்

மதிப்பெண் குறைவுக்காக பெற்றோர் கண்டித்ததால் அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்ட சிறுவனை சக மாணவர்கள் காப்பாற்றினர்.

Update: 2023-08-24 18:45 GMT

விருதுநகர்,

மதிப்பெண் குறைவுக்காக பெற்றோர் கண்டித்ததால் அரசுப்பள்ளி வளாகத்தில் தூக்குப்போட்ட சிறுவனை சக மாணவர்கள் காப்பாற்றினர்.

9-ம் வகுப்பு மாணவன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 14 வயது மாணவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் தேர்வில் சில பாடங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் பெற்றோர் அந்த மாணவனை கண்டித்துள்ளனர்.

தற்கொலை முயற்சி

இதனால் மனவருத்தம் அடைந்த அந்த மாணவன் நேற்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை காப்பாற்றி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாணவன் சிகிச்சைக்காக சாத்தூரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளாா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்