தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-30 18:54 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி ஆவுடையம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 42). டிரைவர். இவர் தினமும் வீட்டிற்கு வரும்போது மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி கவிதா (37) கண்டித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடைேய அடிக்கடி பிரச்சினை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்