குன்னூர் விபத்தில் சிக்கியவர்களின் உடைமைகள் ஒப்படைப்பு
குன்னூர் விபத்தில் சிக்கிய கடையம் பகுதியைச் சேர்ந்தவர்களின் உடைமைகள் ஒப்படைக்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஒரு பஸ்சில் சுற்றுலா சென்றனர். திரும்பி வரும் போது குன்னூர் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடையம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கியவர்களின் உடைமைகளை நீலகிரி மாவட்ட போலீசார், கடையம் போலீஸ் நிலையம் கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் கடையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இந்த உடைமைகளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன் (கடையம்), குணா (குன்னூர்), குன்னூர் தாலுகா பர்லியார் கிராம நிர்வாக அலுவலர் ரெவின் குமார் ஆகியோர் உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.