நெல்லையில் கைத்தறி கண்காட்சி

நெல்லையில் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-08 21:03 GMT

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கைத்தறி துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு கைத்தறி பொருட்கள் கண்காட்சி நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.

கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், ஜமுக்காளங்கள், துண்டுகள், போர்வைகள் மற்றும் குயில்ட் ரகங்கள் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் ரகங்களை தெரிந்து கொள்ள மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் கோ ஆப்டெக்ஸ் மேலாளர் கணபதி, அலுவலா் சக்திவேலம்மாள், கைத்தறி ஆய்வாளர் ரகு, அலுவலர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்