திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2023-05-20 02:30 IST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்சிங் சிறப்புரையாற்றினார். போராட்டத்தின் போது, திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்