விபத்தில் கை துண்டான முதியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் கை துண்டான முதியவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது

Update: 2022-07-04 16:15 GMT

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 71). இவர் கடந்த 2008-ம் ஆண்டு தேனியில் இருந்து பெரியகுளம் சென்ற அரசு பஸ்சில் சென்றார். அப்போது பொம்மையகவுண்டன்பட்டியில் அவர் இறங்கிய போது டிரைவர் கவனக்குறைவாக பஸ்சை எடுத்தார். அப்போது ரங்கநாதன் தடுமாறி கீழே விழுந்ததில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரங்கநாதனின் இடது கை துண்டானது.

இதைத்தொடர்ந்து விபத்து நஷ்ட ஈடு கேட்டு பெரியகுளம் சப்-கோர்ட்டில் ரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு பாதிக்கப்பட்ட ரங்கநாதனுக்கு ரூ.4 லட்சத்து 61 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போக்குவரத்து கழகம் ரங்கநாதனுக்கு ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் மட்டுமே வழங்கியது. மீதமுள்ள ரூ.15 ஆயிரத்தை வழங்கவில்லை.

இதுகுறித்து மீண்டும் சப்-கோர்ட்டில் ரங்கநாதன் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மாரியப்பன், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று பெரியகுளத்தில் இருந்து மதுரை செல்வதற்காக நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ரமேஷ் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்