பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியை தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் கிராமத்துக்கு புதிதாக தார் சாலை அமைப்பதற்காக ஆரம்பக்கட்ட பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை பாதியில் நிறுத்தி உள்ளனர். சாலையையொட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அந்தக் கழிவுநீர் கால்வாயை கட்டாமல் சாலை பணியை தொடங்கி உள்ளனர். சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை சேர்ந்து செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து, பணியை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.