குட்கா கடத்திய வியாபாரி கைது
குட்கா கடத்திய வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கூடலூர்,
தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது குண்டல்பெட் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட 150 குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், கூடலூர் கோத்தர்வயலை சேர்ந்த வியாபாரி முகமது அலி என்ற பாபு (வயது 56) என்பதும், குட்கா கடத்தியதும் தெரியவந்தது. தொடர்ந்து மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் வழக்குப்பதிவு செய்து, முகமது அலியை கைது செய்தார்.