குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது
குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்யப்படுகிறதா? என கடந்த சில நாட்களாக கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் தலைமையிலான போலீசார் கடைவீதி பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் (வயது 58) என்பவரது கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.