குடோனில் குட்கா பதுக்கியவர் கைது

ஆம்பூரில் குடோனில் குட்கா பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-06 17:54 GMT

ஆம்பூரில் குட்கா விற்பனை நடப்பதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூரில் பல இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சாய்பான்சா பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட 36 கிலோ எடை கொண்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஆம்பூர் பழைய ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த முகமதுவாசிம் (வயது 33) என்பவரை ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்