லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்காவை சூளகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-31 18:45 GMT

சூளகிரி

பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியில் கடத்திய ரூ.4 லட்சம் குட்காவை சூளகிரி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு குட்கா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கர்நாடகாவில் இருந்து வரும் கார், வேன், லாரி ஆகியவற்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி டிரைவர் போலீசாரை பார்த்ததும் வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

குட்கா பறிமுதல்

அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரிக்கு குட்காவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரி மற்றும் ரூ.4 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவர் மற்றும் குட்கா கடத்தியவர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்