பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
பேரிகை அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
பேரிகை அருகே மாஸ்தி சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தனர். அதில் குட்கா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக எலசேப்பள்ளியை சேர்ந்த சீனிவாசன் (வயது35) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.