காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்த முயன்ற குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-19 18:45 GMT

பெங்களூருவில் இருந்து வேலூருக்கு காரில் கடத்த முயன்ற குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா கடத்தி வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர் அதில் குட்கா இருப்பது தெரியவந்தது.

3 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர் பகுதியை சேர்ந்த சிராஜுதீன் (வயது 27), ஜாவித் (25), ஹாரூன் (30) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்கள் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா கடத்தி சென்றது தெரியவந்தது இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் காரில் கடத்தி வரப்பட்ட 120 கிலோ குட்கா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்