பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை நடந்தது.;
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று காலை நாயன்மார்கள் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்மலை அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அபிஷேகம் நடந்தது. மதியம் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், பெரம்பலூர் நகர பிராமணர் சங்க நிர்வாகிகள், சிவனடியார்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.