சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
தர்மபுரி முருகன் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது.;
ஆடி மாதத்தில் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடைபெற்றது. இதையொட்டி சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் வழிபாடும் நடைபெற்றது. பின்னர் சந்தன காப்பு அலங்கார சேவை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து யானை வாகனத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருவீதி உலா விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.