ஊர் நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கும்பகோணம் அருகே ஊர் நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-04-24 19:24 GMT

கும்பகோணம் அருகே ஊர் நாட்டாண்மை கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஊர் நாட்டாண்மை கொலை

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பழவத்தான்கட்டளையை சேர்ந்தவர் சைமன்ராஜ். ஊர் நாட்டாண்மையான இவர் கடந்த பிப்ரவரி மாதம் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் படுகாயத்துடன் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலன் இன்றி சைமன்ராஜ் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பான வழக்கில் பழவத்தான்கட்டளை முல்லைநகரை சேர்ந்த ஆகாஷ் (வயது 21), பிரேம்குமார் (22) ஆகியோரை நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆகாஷ், பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, திருச்சி சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்