பழனியில் மரகத லிங்கத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு; இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்

பழனி போகர் ஜீவசமாதியில் உள்ள மரகத லிங்கத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2022-05-30 15:43 GMT

இந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் தலைமையிலான நிர்வாகிகள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், பழனி முருகன் கோவில் வளாகத்தில் போகர் சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது.

இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போகர் சித்தரின் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி புவனேஸ்வரி அம்மன், போகர் வழிபட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான பச்சை மரகத லிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதற்கிடையே இரவில் பச்சை மரகத லிங்கம், புவனேஸ்வரி அம்மன் திருமேனி இருந்த அறையின் கதவை அகற்ற முயற்சி நடந்துள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போகர் ஜீவசமாதியில் உள்ள பச்சை மரகத லிங்கத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Tags:    

மேலும் செய்திகள்