அருணாசலேஸ்வரர் கோவிலில் குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-05-31 12:10 GMT

குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எம்.பி. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அப்போது மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்