மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.
மன்னார்குடி:
மன்னார்குடியை அடுத்த மகாதேவப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது.. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலு அறிவழகன் முன்னிலை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் எம்.என்.பாரதிமோகன் கலந்துகொண்டு பொதுத்தேர்வு 10-ம் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில அகராதி நூலையும், கடந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுதொகையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்தும் தேர்வுக்கு தயார் செய்யும் வழிமுறை குறித்தும் விளக்கிக் கூறினர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா இன்பரசன், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் மோகன் தாஸ், பொருளாளர் குமார், கல்வி புரவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.