உயர் கல்வியை தொடராத மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

Update: 2022-10-21 21:00 GMT

நாகர்கோவில்:

பிளஸ்-2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது.

11 மாணவர்கள் பங்கேற்பு

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் குமரி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். இந்த மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

இந்த முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டது. 5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். இரண்டு மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் மேற்குறிப்பிட்ட 5 மாணவர்களின் விவரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

அதிகாரிகள்

முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அதிகாரி துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் மற்றும் பிற துறைகளான மருத்துவத் துறையை சார்ந்த மனநல மருத்துவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்