கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் லீக் போட்டியில் கூடலூர் ஆரஞ்சு அணி மற்றும் ஊட்டி கேலக்சி அணி பங்கேற்று விளையாடியது. போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் ஆரஞ்சு அணி நிர்ணயிக்கப்பட்ட 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர் சிவராஜ் 37 ரன்கள், வினீத் 35 ரன்கள் எடுத்தனர். ஊட்டி கேலக்சி அணியின் பந்து வீச்சாளர் சூரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஊட்டி கேலக்சி அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணி வீரர் வில்பிரெட் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். கூடலூர் ஆரஞ்சு அணியின் பந்து வீச்சாளர்கள் வின்ஸ்டன் ஜேக்கப் 5 விக்கெட்டுகளையும், சஞ்சீவ் ராம் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.