நாகையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு

நாகையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.;

Update:2023-10-22 00:15 IST

நாகையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

வீரவணக்க நாள் அனுசரிப்பு

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் காவலர் வீரவணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்திலும் நேற்று வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு அங்கு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

21 குண்டுகள் முழங்க அஞ்சலி

அதைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீசார், 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஆயுதப்படை போலீசார் உள்பட 100- க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்