துணை ஆட்சியர் பட்டியலில் திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும்-குரூப்-2 நேரடி நியமன அலுவலர் சங்கம் கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில், துணை ஆட்சியர் பட்டியல்களை திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2023-04-07 18:45 GMT

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில், துணை ஆட்சியர் பட்டியல்களை திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

பதவி உயர்வு

தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தர்மராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடன் அமல்படுத்திட வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் வழங்கிட வேண்டும். மத்திய அரசு அலுவலர்களுக்கு உள்ளது போல் மாநில அரசு அலுவலர்களுக்கும் அகவிலைப்படி உயர்வினை வழங்கிட வேண்டும். உச்ச நீதி மன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், துணை ஆட்சியர் பட்டியல்களை திருத்தம் செய்து வெளியிட்டு பதவி உயர்வுகள் வழங்கிட வேண்டும்.

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒரு துணை வட்டாட்சியர் பணியிடம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஒரு துணை வட்டாட்சியர் பணியிடம் புதிதாக உருவாக்கிட வேண்டும். நேரடி நியமன வருவாய் உதவியாளர்களுக்கு ரூ.9300 என்ற ஊதிய விகிதத்திலும், வட்டாட்சியர்களுக்கு ரூ.15600 என்ற ஊதிய விகிதத்திலும் ஊதிய மறு நிர்ணயம் செய்திட வேண்டும்.

மாநில கூட்டம்

5 ஆண்டு பயிற்சியினை நிறைவு செய்துள்ள நேரடி நியமன உதவியாளர்களுக்கு பயிற்சி முடிவுற்றவுடன் புரபேசனரி துணை தாசில்தார் என பெயர் மாற்றம் செய்து உயா்த்தப்பட்ட ஊதியத்தினை வழங்கிட வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய மாவட்டம், கோட்டம், வட்டம், குறுவட்டம் மற்றும் வருவாய் கிராமங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். ஆனால் இந்த கோரிக்கைகள் மீது அரசு உரிய ஆணைகள் பிறப்பிக்க காலதாமதம் ெசய்வதால் திருச்சியில் நடைபெற உள்ள தமிழ்நாடு வருவாய்த்துறை (குரூப்-2) நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளது

இவ்வாறு அதில் கூறியுள்ளார் 

Tags:    

மேலும் செய்திகள்