குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு
சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாகதான் தேர்வு முடிவுகள் தாமதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை,
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (ஜனவரி ) 12 ஆம் தேதி வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.
மேலும், தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன் குரூப் 2 முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் குரூப் 2 தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.