தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் மாசடையும் நிலத்தடி நீர்; கலெக்டரிடம், காங்கிரஸ் நிர்வாகி புகார்

தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நிலத்தடிநீர் மாசடையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம், காங்கிரஸ் நிர்வாகி புகார் மனு கொடுத்தார்.

Update: 2022-12-05 17:56 GMT

தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நிலத்தடிநீர் மாசடையாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம், காங்கிரஸ் நிர்வாகி புகார் மனு கொடுத்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் இன்று நடந்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெஸ்டின் ராஜ்குமார் மற்றும் சிலர் மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

பின்னர் கலெக்டர் விசாகனிடம் பேகம்பூரை அடுத்த ஏ.பி.நகர் பொதுமக்கள் சார்பில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கொட்டப்பட்டி, பள்ளப்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

பண மோசடி

இதேபோல் எரியோடு பாலசுப்பிரமணியன் கோவில் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரோஜாராணி கொடுத்த மனுவில், அரசுத்துறையில் பணியாற்றும் ஒருவர் என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 254 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து நத்தம் தாலுகாவில் இலவச வீட்டுமனை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 11 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், திண்டுக்கல், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்