புதிய பயணிகள் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா
வடக்கு மயிலோடை கிராமத்தில் புதிய பயணிகள் நிழற்கூடம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு யூனியனைச் சேர்ந்த தெற்கு மயிலோடை பஞ்சாயத்து வடக்கு மயிலோடை கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சுமார் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன், தெற்கு மயிலோடை பஞ்சாயத்து தலைவர் வள்ளி செந்தில்வேல் முன்னிலை வகித்தார். ராஜாபுதுக்குடி பால்ராஜ், சாலைப்புதூர் வெயில்முத்து, மாரிச்செல்வம், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் அய்யப்பன் மற்றும் அந்தோணிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.