மளிகை கடைக்காரர் ரெயிலில் அடிபட்டு சாவு

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே மளிகை கடைக்காரர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

Update: 2023-05-17 12:00 GMT

வாணியம்பாடி அருகே பழைய வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது 58). மளிகை வியாபாரி. இவருக்கு ஜெசித்ரா என்கின்ற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். கோவிந்தராஜன் வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே கோவிந்தாபுரம் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ரெயிலில் அடிபட்டு வீசப்பட்டார்.

அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்