ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம்

ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம் வரும் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது.

Update: 2023-10-11 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் வினியோகம் குறித்த குறைதீர்க்கும் முகாம் வரும் 14-ந்தேதி நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் தாலுகாவில் சக்கரக்கோட்டை ரேஷன்கடை, ராமேசுவரம் தாலுகாவில் தங்கச்சிமடம் ரேஷன் கடை, திருவாடானை தாலுகாவில் தோட்டாமங்களம் ரேஷன்கடை, பரமக்குடி தாலுகாவில் விளத்தூர் இ-சேவை மையம், முதுகுளத்தூர் தாலுகாவில் விளங்குளத்தூர் ரேஷன் கடை, கடலாடி தாலுகாவில் மேலக்கிடாரம் பஞ்சாயத்து அலுவலகம், கமுதி தாலுகாவில் முஸ்டகுறிச்சி ரேஷன் கடை, கீழக்கரை தாலுகாவில் மல்லல் ரேஷன்கடை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சாத்தனூர் ரேஷன்கடை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் பிழை திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய நகல் ரேஷன் கார்டு போன்ற கோரிக்கை மனுக்களை அளித்து சேவைகளை பெறலாம். மேலும் ரேஷன் கடைக்கு வர இயலாத வயதானவர்களுக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். மேலும் பொது ரேஷன் கடைகளின் செயல்பாடு, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்