மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான குறை கேட்பு கூட்டம்
மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான குறை கேட்பு கூட்டம் நடந்தது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 157 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புப் பணிகள் குறித்தும் அவர்களுக்கு பணித்தளங்களில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு 2 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.
அதன்படி கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைகேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் வருகிற 31-ந்தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த குறைகேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.