போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.

Update: 2023-05-31 12:42 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது. கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 15 மனுதாரர்களை நேரில் அழைத்தும், 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்