போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

Update: 2023-08-23 20:17 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. துணை கமிஷனர் அனிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்