கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரியில், நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிாி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள், எரிவாயு முகவர்களுடனான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமை தாங்குகிறார். எனவே, மேற்படி எரிவாயு குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்து எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதால் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.