கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-17 18:08 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 306 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளி

கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45) என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகள் சூர்யாவுடன் மனு அளிக்க வந்தார். அப்போது மாற்றுதிறனாளிகளுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்களின் இடத்திற்கே வந்து கலெக்டர் பிரபுசங்கர் மனுக்களை பெற்றார்.

அப்போது ஈஸ்வரி தனது மகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கக்கோரி திடீரென கலெக்டர் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அப்போது கலெக்டர் அவரை சமாதானம் செய்து கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாய கழிவுநீர்

இந்து முன்னணி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

கருப்பம்பாளையம், அப்பிபாளையம் ஊர்பொதுமக்களுக்கு கடந்த 2 மாதங்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பயன்படுத்த முடியவில்லை. அமராவதி ஆற்றில் சாய கழிவுநீர் அல்லது தோல் தொழிற்சாலை கழிவுநீர் கலந்து அமராவதி ஆற்றை மாசுபடுத்தி விட்டது. இந்த கழிவுநீரை குடித்த பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பல உடல்உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அமராவதி ஆற்றில் சாய கழிவுநீர் கலப்பதை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பம்பாளையம், அப்பிபாளையம் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்