குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 229 மனுக்கள் பெறப்பட்டன
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகைகோரி, புகார் தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அடையாள அட்டை, உபகரணங்கள், அடிப்படை வசதி கோரி மொத்தம் 229 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தீர்வுகாண்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் சமூகபாதுகாப்பு திட்ட அலுவலர் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.