போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். இதில் நிலஅபகரிப்பு, பண மோசடி, பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் அதிகமாக இருந்தது. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.