கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவிலும், பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி தாலுகாகம்மம்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கொல்லப்பட்டி கிராமத்தில் பொது வினியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு குடிமை பொருள் வட்ட வழங்கல் தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் வருவாய் ஆய்வாளர் சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் உமாராணி துரைராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சென்றாயப்பன், துணைத்தலைவர் ஆஷா குமரவேல், விற்பனையாளர் முத்தமிழரசி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்றவை குறித்து பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.