தர்மபுரியில் காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Update: 2022-12-21 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தர்மபுரி ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

மேலும் போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பொதுமக்கள் மனு கொடுத்தனர். முகாமில் மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டன. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், ரவிக்குமார், புகழேந்தி கணேஷ், ராதாகிருஷ்ணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் ஆகியோர் கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் 38 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்