முதிர்ந்து வீணாகும் பச்சை தேயிலை

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-11-03 18:45 GMT

வால்பாறை

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேயிலை சாகுபடி

வால்பாறை பகுதியில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு போன்ற பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆண்டு முழுவதும் பயன் தரக்கூடிய தேயிலை செடிகளையே பெரும்பாலான தோட்ட நிர்வாகங்கள் சாகுபடி செய்துள்ளது. இங்கு விளையும் பச்சை தேயிலையை தொழிலாளர்கள் மூலம் பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்து வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வனவிலங்குகள் தொல்லை, குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பின்மை, போதிய மருத்துவ வசதி இன்மை, குறைவான கூலி போன்ற காரணங்களால் பிழைப்பு தேடி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

பற்றாக்குறை

இதன் காரணமாக தேயிலை ேதாட்டங்களில் பச்சை தேயிைல பறிக்க தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதை சமாளிக்க அசாம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அழைத்து வந்து பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். ஆனாலும் உரிய நேரத்தில் பச்சை தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப முடியாத அளவுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் பச்சை தேயிலை முதிர்ந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரட்டு இலை

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

ஆட்கள் பற்றாக்குறையால் தோட்டங்களில் பச்சை தேயிலை முதிர்ந்து கரட்டு இலையாக மாறி வருகிறது. இதை தேயிலைத்தூள் தயாரிக்க பயன்படுத்த முடியாது. எனினும் பச்சை தேயிலையுடன் சேர்த்து கரட்டு இலைகளையும் பறிக்க வேண்டிய நிலை உள்ளது. பச்சை தேயிலையை மட்டும் தனியாக பார்த்து பார்த்து பறிப்பது சாத்தியமில்லாதது. இதனால் மொத்தமாக பறித்த பிறகு கரட்டு இலைகளை தனியாக பிரித்தெடுக்க வேண்டியுள்ளது. இது தவிர உரமிடுதல், களை பிடுங்குதல் போன்ற பாராமரிப்பு பணிகளும் உள்ளதால் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதுமட்டுமின்றி உரிய நேரத்தில் பச்சை தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்ப முடியாததால் நிர்வாகத்துக்கு வருமானமும் கிடைப்பது இல்ைல. இதனால் தேயிலை தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்