கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

Update: 2023-05-02 12:33 GMT

பெருமாநல்லூர்,

மே தினத்தையொட்டி கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் வாணி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர ்ஸ்ரீதர், தாசில்தார் வட்டார ஊராட்சி ஜோதி ஆகியோர் பங்கேற்றனர். இதில் கணக்கம்பாளையம் கிராம வளர்ச்சித் திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கணக்கம்பாளையத்தில் உள்ள மதுக்கடையை அகற்றுதல், நீர்வழிப்பாதையை நில அளவீடு செய்து மழைநீர் செல்ல வழிவகை செய்தல் உள்பட பல்வேறு நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து 6 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி, தோட்டக்கலைத்துறை சார்பாக 2 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து அடிக்கும் எந்திரம், கணக்கம்பாளையம் ஊராட்சியில் பணிபுரியும் 30 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வினீத் வழங்கினார். தொடர்ந்து நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சியை  கலெக்டர் தொடங்கி வைத்தார்.  கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்