சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-08 19:35 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான 15-ந் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் தவறாமல் கூட்டப்பட வேண்டும். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், வறுமை குறைப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், இதர பொருட்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.

கூட்டங்களில் தாசில்தார்களை பார்வையாளர்களாக கலந்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்