தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம்
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் ஆண்டுக்கு 5 நாட்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சுதந்திர தினத்தன்றும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 589 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நேற்றுகிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சையை அடுத்த திட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி சுந்தரம், வேளாண்மை அதிகாரிகள் வினோதினி, சரளா, சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.