கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

ராதாமங்கலம் ஊராட்சியில் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது

Update: 2023-03-15 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II-க்கான அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராதாமங்கலம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைத்தல், கழிவறை கட்டுதல், நெற்களம் அமைத்தல் உள்பட 7 பணிகளுக்கு ரூ. 39 லட்சத்து 68 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில் கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் மணிகண்டன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, உதவி வேளாண்மை அலுவலர் எழிலரசி, ஊராட்சி செயலாளர் மாதவன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி துணை தலைவர் பிச்சமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்