பட்டதாரி பெண் மதுரையில் மீட்பு

சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண் மதுரையில் மீட்கப்பட்டார்.

Update: 2022-05-30 20:05 GMT

மதுரை,

மதுரை திடீர் நகர் போலீசார் பெரியார் பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதை கண்டனர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது சென்னை ஆவடியை சேர்ந்த பூஜா(வயது 26) என்பதும் பட்டப்படிப்பு படித்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 29-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி மதுரை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.அவர்கள் நேற்று மதுரை திடீர் நகர் போலீஸ் நிலையம் வந்தனர். திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் அந்தப் பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்