உசிலம்பட்டி, கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும்-எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை

உசிலம்பட்டி, கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-09-10 20:36 GMT

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி, கொட்டாம்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

மகளிர் அரசு கலைக்கல்லூரி

உசிலம்பட்டி எம்.எல்.ஏ.அய்யப்பன் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

58 கிராமம் கால்வாய் திட்டத்தில் அணையில் 65 அடி நீர்மட்டம் இருக்கும் போதே தண்ணீர் திறக்க வேண்டும். மல்லபுரம்- மயிலாடும்பாறை சாலையில் போக்குவரத்து ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். உசிலம்பட்டியில் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கை போக்குவரத்து காரணத்தை கருத்தில் கொண்டு சீமானூத்தில் உள்ள அரசு இடத்தில் அமைக்க வேண்டும். உசிலம்பட்டி பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும். உசிலம்பட்டி பகுதியில் அவ்வப்பொழுது பெண் சிசுக்கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்கும் வகையில் பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.இதன் காரணமாக இந்தப் பகுதியில் பெண்கள் அரசு கலைக்கல்லூரியை கட்டிக் கொடுக்க வேண்டும்.

திருமங்கலம் பிரதான கிளை கால்வாயான காளப்பன்பட்டி, பெருங்காமநல்லூர் அதனை சுற்றியுள்ள கால்வாயை தூர்வார வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

நூற்பாலையை திறக்க வேண்டும்

மேலூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய 10 கோரிக்கைகளை எம்.எல்.ஏ.பெரியபுள்ளான் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகரிடம் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பகுதியான மேலூர் தொகுதியில் உள்ள கொட்டாம்பட்டியில் 5 மாவட்ட மாணவியர்கள் பயன்படும் வகையில் ஒரு அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைத்தல். புலிப்பட்டி அருகே பெரியாறு பிரதான கால்வாயிலிருந்து கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சூரப்பட்டி ஊராட்சி வரை விரிவாக்க கால்வாய் அமைத்தல் மற்றும் சிங்கம்புணரி விரிவாக்க கால்வாய்க்கு நிரந்தர அரசாணை வழங்குதல், காவிரி ஆறு கரூரிலிருந்து, வேடசந்தூர், நத்தம், கொட்டாம்பட்டி, வெள்ளலூர், சிவகங்கை வழியாக வைகை ஆற்றில் இணைப்பது. மேலூர் தொகுதியில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு கருதி மேலூரில் மூடிக்கிடக்கும் கூட்டுறவு நூற்பாலையை திறப்பது, கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் ஒரு புதிய தொழிற்சாலை அமைத்தல். மேலூர் தொகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்